Thursday, August 4, 2011

பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க


ஒரு பதிவை பகிர்வதற்கும், திருடுவதற்கும் ஒரே வித்தியாசம் தான். பதிவின் எழுத்தாளரிடம் அனுமதி பெற்று பகிர்ந்தால் அது பகிர்வு. அனுமதி இல்லாமலும், எழுதியவரின் பெயரை, ப்ளாக்கை குறிப்பிடாமலும் பகிர்ந்தால் அது திருட்டு. தற்போது இணையத்தின் வளர்ச்சிக் காரணமாக நமது பதிவுகள் Copy செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால், அதை தடுப்பதற்கு சில வழிகளை செய்யலாம். அதில் ஒன்று, நமது பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க,Copy செய்யும் முறையை முடக்க வேண்டும்(Disable Copy and
Paste).

அவ்வாறு செய்ய:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore
Template
என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக்
செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.





2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு


<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும்.

<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.

 உதாரணத்திற்கு,

<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>


அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு

bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"
என்பதை சேர்க்கவும்.


குறைகள்: இப்படி செய்வதால், வாசகர்கள் பதிவில் நாம் சொன்னதை மேற்கோள் காட்டவும் காப்பி செய்ய முடியாது. :( :( :(

ஆனாலும் , நமது பதிவுகள் காப்பி செய்யப்படுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.




Reference: http://www.hypergurl.com/





0 comments em “பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க”

Post a Comment

 

tamilenews Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger